கடந்த ஜனவரி மாதத்தில், தனிநபர் மாதாந்த செலவினம் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் ஜனவரி மாதம் இவ்வாறு தனிநபர் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ள தொகை
இதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு நபருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 16,334 ரூபாவாகும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இது 16,191 ரூபாவாக பதிவாகியிருந்தது.
கொழும்பு மாவட்டம் அதிக தனிநபர் செலவினங்களைக் கொண்ட மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இது 17,617 ரூபாவாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக தரவுகளின்படி, தனிநபர் செலவினத்தில் மிகக் குறைந்த செலவினங்களைக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதுடன், அது 15,780 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது.