அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழகத்தின் இப்தார் நிகழ்வு...!!!
(முகம்மது இர்பான்)
அட்டாளைச்சேனை News Star விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.நாசர் தலைமையில்
நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,தேசிய காங்கிரஸ் தலைவர் ALM அதாஉல்லாஹ், நியூஸ்டார் கழகத்தின் ஆலோசகர் அதிபர் எம்.ஐ.எம்
றியாஸ் உட்பட அரசியல் பிரமுகர்கள்
ஊர்பிரமுகர்கள்,கல்விமானகள்,இளைஞர்கள்,உலமாக்கள், விளையாட்டு உத்தியோகத்தர், கழகத்தின் உறுப்பினர்கள் நிருவாகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தமை
குறிப்பிடத்தக்கது.