காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : 100பேர் பலி !



காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காஸாப் பகுதியில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.ஜனவரி 19 ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபின் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை தற்போது நிகழ்த்தியுள்ளது.

 


இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு கூறுகையில் ,

 

பணயக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும்  பணயக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால், கூடுதல் இராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்